மருத்துவராகப் பணியாற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு கன்டோன் அரசாங்கம் அதிகபட்ச வயதெல்லையை நிர்ணயிக்க முடியாது என்று சுவிஸ் பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவர் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு 80 வயது வரம்பை நிர்ணயிக்கும் நியூசாடெல் சட்டம், கூட்டாட்சி சட்டத்திற்கு இணங்கவில்லை என்றும் பெடரல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1944 ஆகஸ்ட் மாதம் பிறந்த மருத்துவரான விண்ணப்பதாரர், ஏப்ரல் 2023 இல் தனது பயிற்சிக்கான அங்கீகாரத்தைப் புதுப்பித்திருந்தார்.
இருப்பினும், நியூசாடெல் கன்டோன், அதன் விதிமுறைகளைப் பயன்படுத்தி, 2024 ஆகஸ்ட் இறுதி வரை அதன் செல்லுபடியாகும் காலத்தை மட்டுப்படுத்தியது.
மருத்துவர் 80 வயதை எட்டும் வரையோ அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்த பொது வரம்பு பல்கலைக்கழக மருத்துவத் தொழில்கள் சட்டத்துடன் (LPMéd) ஒத்துப்போகவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூட்டாட்சி நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக கருதப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், 80 வயதுக்கு மேற்பட்ட 338 மருத்துவர்கள் சுவிட்சர்லாந்தில் மருத்துவர்களாக பணியாற்றியிருந்தனர்.
மூலம்- swissinfo