சூரிச்சிலிருந்து புளோரிடாவின் மியாமிக்குச் சென்ற LX64 இலக்க ஏர்பஸ் 340-300 சுவிஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் இரண்டு மணி நேரம் வரை பயணித்த பின்னர், சூரிச்சிற்குத் திரும்பியது.
விமானத்தின் இயந்திரங்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டதாலேயே பயணம் பாதியில் நிறுத்தப்பட்டது.
விமானத்தில் 195 பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்ததாக விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், LX64 விமானத்தின் பயணமும், LX65 விமானத்தின் திரும்பும் பயணமும் ரத்துச் செய்யப்பட்டன.
மூலம் – 20min

