சூரிச்சில் உள்ள Volketswil இல் Feldhof உள்ளக நீச்சல் தடாகத்தில், நேற்றுக்காலை ஏற்பட்ட இரசாயனக் கசிவினால் அயலில் உள்ள பாடசாலை மற்றும் முன்பள்ளியில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அருகில் உள்ள பாடசாலை மற்றும் மழைலையர் பள்ளியில் இருந்த 85 குழந்தைகள் உள்ளிட்ட 94 பேர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நண்பகலில் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவசர சேவைப் பிரிவினர், பொலிசார், தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் பாடசாலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
உள்ளக நீச்சல் தடாகம் இன்னமும் மூடப்பட்ட நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min