சுவிட்சர்லாந்தில் ஒருமுறை பயன்படுத்தும் மின்-சிகரெட் அல்லது வாப் (vape) விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என்று சுவிஸ் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, 2024 ஆம் ஆண்டு பிரதிநிதிகள் சபையால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக, நேற்று சுவிஸ் செனட் வாக்களித்துள்ளது.
பயன்படுத்தி விட்டு தூக்கி வீசும் வாப்கள் 2020ஆம் ஆண்டு முதல் சுவிஸ் சந்தையில் உள்ளன.
இளம் பருவத்தினர் மற்றும் இளம் பருவத்திற்கு முந்தையவர்கள் குறிப்பாக வண்ணமயமான, பல சுவைகள் கொண்ட தயாரிப்புகளால் ஈர்க்கப்படுகிறார்கள்.
இதன் நுகர்வு போக்கு மேல்நோக்கி உள்ளது என்று, இந்த தீர்மானத்தின் பின்னணியில் உள்ள பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டோஃப் கிளிவாஸின் தெரிவித்துள்ளார்.
இந்த வாப்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அதிக அளவு நிக்கோடின் இருக்கலாம்.
சில சமயங்களில் 20 மி.கி/மிலி என்ற சட்ட வரம்பை மீறலாம்.
இது பல நூறு வழக்கமான சிகரெட்டுகளின் பஃப்களுக்கு சமமான அளவு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பக்கெட்டுகள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அவை நிக்கோடின் உப்பு வடிவத்தில் நிக்கோடினைக் கொண்டுள்ளன, இது நிக்கோடினை விட ஆபத்தானது அல்ல, என்றாலும், அதிக போதைக்குரியது.
இந்த தயாரிப்புகளின் குறைந்த விலை, கவர்ச்சிகரமான சுவைகள் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பினால் குறிப்பாக இளைஞர்களை போதைக்கு ஆளாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றது.
மூலம்-swissinfo