அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்துள்ளார்.
இந்த பயணத் தடை உத்தரவில் கையெழுத்திடுவதன் மூலம், ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்க குடிமக்களை “வெளிநாட்டு பயங்கரவாதிகளிடமிருந்து” பாதுகாக்கிறார் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தடை ஜூன் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
இது ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், கொங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹெய்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களைப் பாதிக்கும்.
கூடுதலாக, புருண்டி, கியூபா, லாவோஸ், சியராலியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
அமெரிக்கா மற்றும் அதன் மக்களின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க நான் செயற்பட வேண்டிய நிலையில் இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
மூலம் – 20min.