2.3 C
New York
Sunday, March 29, 2026

242 பேருடன் லண்டன் புறப்பட்ட எயர் இந்தியா விமானம் கோர விபத்து.

இந்தியாவின் – அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட எயர் இந்தியா விமானம் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று பிற்பகல் 1.50 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 200இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

12 பணியாளர்கள் உள்ளிட்ட 242 பேருடன் புறப்பட்ட சற்று நேரத்தில், விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள கட்டடங்களில் மோடி வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் விமானத்தில் இருந்தவர்கள் மாத்திரமன்றி, விமான நிலைய கட்டடங்களில் இருந்தவர்களும் இந்த தீவிபத்தில் சிக்கியுள்ளனர்.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எரிந்த நிலையில் சடலங்கள் சிதறிக் கிடக்கின்றன. எரிகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

லண்டன் நோக்கிப் பயணித்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் பயணம் செய்துள்ளார்.

அந்த விமானத்தில் 169 இந்தியர்களும், 53 பிரித்தானியர்களும், 7 போர்ச்சுக்கல் நாட்டவர்களும், ஒரு கனடியரும் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles