20.6 C
New York
Wednesday, June 17, 2026

ஆற்றில் நீந்தியவர் நீரில் மூழ்கி மரணம்.

சோலோதர்ன் கன்டோனில் : ஷோனென்வெர்ட் அணைக்குக் கீழே உள்ள எர்லின்ஸ்பாக்கிற்கு அருகிலுள்ள ஆரே ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பொலிசார் உடனடியாக ஒரு பெரிய மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர். அவர்களுக்கு ஒரு படகு மற்றும் ஒரு ரேகா ஹெலிகொப்டர் ஆதரவு அளிக்கப்பட்டது.

சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஹெலிகொப்டர் குழுவினர் அணைக்குக் கீழே காணாமல் போன நபரைக் கண்டுபிடித்தனர்.

அவரை விரைவாக தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து காப்பாற்ற முயன்றனர்.

36 வயதுடைய அந்த நபர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும்,  சிறிது நேரத்திலேயே அவர் அங்கு இறந்தார்.

Related Articles

Latest Articles