-5.7 C
New York
Sunday, December 28, 2025

காருக்குள் சிக்கிய சிறுவன்- உடைத்து மீட்ட பொலிஸ்.

Winterthurஇல் காருக்குள் அகப்பட்ட இரண்டரை வயது குழந்தையை கண்ணாடிகளை உடைத்து பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது குழந்தை கார் கதவை மூடிக் கொண்டு உள்ளே சிக்கியிருப்பதாக தாயார் ஒருவர் பொலிசாரின் உதவி கோரினார்.

குழந்தையினால் கதவைத் திறக்க முடியாத நிலையில் வெப்பநிலை அதிகரித்து வந்ததால், கண்ணாடிகளை உடைத்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles