ஸ்பெயினில் காருக்குள் இருந்த இரண்டு வயது சிறுவன் வெப்பத் தாக்குதலால் மரணமாகியுள்ளான்.
பார்சிலோனாவிலிருந்து தென்மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வால்ஸ் நகரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
2 வயது சிறுவனை காருக்குள் விட்டு விட்ட தந்தை வெளியே சென்றிருந்தார்.
அவர் திரும்பி வந்த போது சிறுவன் மூச்சுப் பேச்சின்றி இருந்துள்ளான்.
துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தந்தை ஏற்கனவே தனது மகனை குளிரூட்டப்பட்ட அறைக்கு தூக்கிச்சென்றிருந்தார்.
சிறுவனை காப்பாற்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸை எட்டியிருந்தது.
இருப்பினும், கொளுத்தும் வெயிலில் காருக்குள், வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரக்கூடும்.
மூலம்- bluewin