வடக்கு சுவிட்சர்லாந்தின் வெல்தெய்மில் உள்ள ஒரு தோட்டத்தில் கிங்ஸ் ஸ்நேக் எனப்படும் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் நீளமுள்ள இந்தப் பாம்பு சிவப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தைக் கொண்டது.
இது ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட பாம்பு வகை அல்ல.
ஒரு பொலிஸ் ரோந்துப் பிரிவு சனிக்கிழமை இந்த பாம்பைப் பிடித்ததாக ஆர்காவ் மாகாண காவல்துறை நேற்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாம்பின் உரிமையாளர் இன்று தங்களைத் தொடர்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வார இறுதியில் அவர் வீட்டில் இல்லை என்றும் நேற்று மாலை திரும்பிய போது பாம்பு அங்கு இல்லை என்று கண்டுபிடித்தாகவும், அவர் கூறியுள்ளார்.
கிங்ஸ் பாம்புகள் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
அங்கு அவை அமெரிக்கா முழுவதும் மற்றும் மெக்சிகோவிலும் காணப்படுகின்றன. இவை விஷம் கொண்டவை அல்ல.
சுவிட்சர்லாந்தில் எட்டு பூர்வீக பாம்பு இனங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு மட்டுமே விஷம் கொண்டவை.
ஆஸ்ப் வைப்பர் மற்றும் பொதுவான ஐரோப்பிய பாம்பு வகைகளே அவை.
1961 முதல் சுவிட்சர்லாந்தில் இரண்டு பூர்வீக விஷப்பாம்பு இனங்களால் கடிக்கப்பட்ட யாரும் உயிரிழக்கவில்லை.
மூலம்- swissinfo