பெர்னில் நேற்று நடந்த பலஸ்தீனம் குறித்த குழு விவாதத்தில் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
முன்னதாக பெர்ன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மன்னிப்பு சபை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய அனுமதியை ரத்துச் செய்திருந்தது.
சமநிலையை உறுதி செய்ய முடியாது என்ற அடிப்படையில் பல்கலைக்கழகம் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்திருந்தது.
இதன் பின்னர் அதே பகுதியில் தனியார் நிகழ்விடத்தை சர்வதேச மன்னிப்புச் சபை நிகழ்வை நடத்தியுள்ளது.
அங்கு ஐ.நா நிபுணர் அல்பானீஸ் கிட்டத்தட்ட 400 பேர் முன்னிலையில் உரையாற்றியுள்ளார்.
பல்கலைக்கழகம் அதன் பங்கு என்ன என்பதை உணராமல் இருக்கலாம் என்று அல்பானீஸ் கூறினார்.
சர்வதேச சட்டத்தின் கண்ணோட்டத்தில் காசா பகுதியில் நடந்த நிகழ்வுகளை மதிப்பிடும் பணியை மேற்கொண்டுள்ள ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் அல்பானீஸ், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டினார்.
மூலம்- swissinfo