வன்முறை இஸ்ரேலிய குடியேறிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளில் சுவிட்சர்லாந்து சேர வேண்டும் என்ற அழைப்பை, சுவிஸ் செனட் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலுடனான இராணுவ ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதையும் செனட்டின் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்பவில்லை.
இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கார்லோ சோமருகாவின் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டிருந்த ஐந்து கோரிக்கைகளில் நான்கை செனட் சபை நேற்று தெளிவான பெரும்பான்மையால் நிராகரித்துள்ளது.
அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசாங்கம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே செனட் ஏற்றுக்கொண்டது.
இருப்பினும், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தில் வன்முறை யூத குடியேறிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை செனட் நிராகரித்தது.
இஸ்ரேலுடனான இராணுவ ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கையையும் அது மறுத்துவிட்டது.
மூலம்- swissinfo