ரயில்வே அதிகாரிகளுக்கு எதிரான பயணிகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக SBB தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 10 சம்பவங்கள் வரை பதிவாகின்றன. கடந்த மாதம் மட்டும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக 20 பயணிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வழிகளில் ஆண்டு தோறும் 3600 பணியாளர்கள் தாக்கப்படுவதாகவும், SBB தெரிவித்துள்ளது.
பயணச்சீட்டு பரிசோதனையில் ஈடுபடும் பரிசோதகர்கள் அச்சுறுத்தப்படுவது, தாக்கப்படுவது அவமதிக்கப்படுவது தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் தொடருந்துப் பயணிகள் முன்பாக, தமது பாலுறுப்பை வெளிப்படுத்தி அவமதிக்கும் சம்பவங்கள் நடப்பதாகவும், குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மூலம் – 20min.

