கிழக்கு சுவிட்சர்லாந்து மற்றும் சுவிஸ் பீடபூமியின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மாலை 6 மணியளவில் 40 தொடக்கம் 80 மிமீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கில், இரவு 9 மணி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
நீரோடைகள் மற்றும் பொதுவாக வறண்ட பள்ளங்களில் நீர்மட்டம் உயரும் சாத்தியம் இருப்பதாக MeteoSwiss எச்சரித்துள்ளது.
மக்கள் ஆற்றங்கரைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மூலம்- 20min.