25 C
New York
Wednesday, July 23, 2025

சூரிச் ஏரியில் படகில் இருந்து விழுந்தவர் சடலமாக மீட்பு.

சூரிச் ஏரியில் ஏரியில் நங்கூரமிட்டிருந்த படகிலிருந்து விழுந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை  3:30 மணியளவில்,இந்தச் சம்பவம் குறித்து வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, நகர காவல்துறையினர், பல ரோந்துப் படையினரையும் சுழியோடும் வீரர்களையும் சம்பவ இடத்திற்கு அனுப்பினர்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் சுழியோடிகளால் 55 வயதுடைய நபரின்  உயிரற்ற உடல்  பல மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

படகில் இரவைக் கழித்த அவர், எந்த தடயமும் இல்லாமல் காணாமல் போன நிலையில் அவருடன் தங்கியிருந்தவர், உடனடியாக சூரிச் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இறப்புக்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் காரணம் குறித்து சூரிச் நகர காவல்துறை, சூரிச் தடயவியல் மருத்துவ நிறுவனம் மற்றும் பொறுப்பான அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles