சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை வானத்தில் அழகான இளம்சிவப்பு (pink) வண்ண வானவில் தோன்றியது.
ஷாஃப்ஹவுசென் கன்டோனில் உள்ள நியூஹவுசென் ஆம் ரைன்ஃபால் முதல் ஆர்காவ் கன்டோனில் உள்ள கோல்லிகென் வரையான பகுதிகளில் இது தென்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இளஞ்சிவப்பு வானவில். “நம்பமுடியாததாக இருந்தது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஒரு வானவில் பொதுவாக ஊதா நிறத்தில் இருந்து நீலம், பச்சை, மஞ்சள் முதல் சிவப்பு வரை வண்ணங்களின் சாய்வில் தோன்றும்.
ஆனால் இந்த வானவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்பட்டது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூலம்- 20min.