ஜெர்மனின் போஹ்மேட் நகராட்சியில் , கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சிறுவன் மீது மோதிய பின்னர், பறந்து சென்ற கட்டடத்தின் கூரைப் பகுதியில் சிக்கிக் கொண்டது.
இந்த அதிசயமான விபத்தில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு 8:00 மணியளவில் ஓஸ்னாப்ரூக் மாவட்டத்தில் வீதியை விட்டு விலகிய கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் மோதிய பின்னர் ஒரு வேலி வழியாக நுழைந்து, தோட்டத்திற்குள் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் மீது மோதியது.
தரையில் காணப்பட்ட சமமற்ற தன்மையால், அந்தக் கார் மேலே கிளம்பி, சுமார் மூன்று மீட்டர் உயரத்தில், ஒரு வீட்டின் கூரைப் பகுதிச் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.
திரைப்படங்களில் வரும் சாகசக் காட்சியைப் போல அந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
42 வயது ஓட்டுநர், அவரது 43 வயது மனைவி மற்றும் 11 மற்றும் 12 வயதுடைய அவர்களது இரண்டு மகன்கள் அடங்கிய ஒரு குடும்பத்துடன், 13 வயது சிறுவனும் அந்தகாரில் இருந்தனர்.
விபத்தில் பெண் பலத்த காயமடைந்தார். ஏனைய 4 பேரும் காயம் அடைந்தனர்.
மூலம்- bluewin