எவியோனாஸில் உள்ள ஒரு துப்பாக்கி கடையில் திங்களன்று நடந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் தப்பிச் சென்ற நிலையில் வலய்ஸ் கன்டோனல் பொலிசார் திங்கள் பிற்பகலில் ஹெலிகொப்டர் மூலம் நடத்தப்பட்ட தேடுதலில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை, இரண்டாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக வலய்ஸ் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
அப்பகுதியில் தேடுதல் மற்றும் விசாரணை நடந்து வருகிறது.
மூலம்- 20min.