ஜெர்மாட்டிற்கு மேலே உள்ள ரிஃபெல்ஹார்ன் பகுதியில் 46 வயது ஜப்பானிய நபரின் உடல் ஜூலை 16 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக வலய்ஸ் கன்டோனல் காவல்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அந்த மலையேற்ற வீரர் ஜூலை 9 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
சுமார் 2,400 மீட்டர் உயரத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
வலய்ஸ் கன்டோனல் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அந்த நபர் ஜெர்மாட்டில் தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.
ஜூலை 9 ஆம் திகதி அவர் திரும்பி வராததால், உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து கன்டோனல் காவல்துறை தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.
மூலம்- 20min.