ஜெனீவாவில் அர்வ் நதிக்கரையில் உள்ள விஞ்ஞான II பல்கலைக்கழக கட்டிடத்தில் இன்று காலை 9:30 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது.
ஆரம்ப தகவலின்படி, ஒரு ஆய்வகத்தில் ஒருவர் தற்செயலாக ஒன்றுக்கொன்று வினைபுரியக் கூடாத இரண்டு பொருட்களைக் கலந்த போது, இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆபத்து எதுவும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி வளாகத்தை ஆய்வு செய்தனர்.
மூலம்- bluewin