மெசோக்கோவில் உள்ள A13 மோட்டார் பாதையில் நேற்று மாலை மாலை 5:30 மணியளவில், இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
59 வயதான பெண் ஓட்டுநர் ஒருவர் தெற்கு நோக்கி பயணித்தபோது, எதிர் பாதையில் ஓட்டிச் சென்ற 23 வயது ஆண் மீது மோதினார்.அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
மீட்பு ஹெலிகொப்டர் அவரை சூரிச்சில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
அதேவேளை, காரில் இருந்த மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் இரண்டு கார்களும்,, ஒரு மோட்டார் படகுடன் ஒரு டிரெய்லரும் சேதம் அடைந்தன.
மூலம்- 20min.