அன்டெரர் ரைன்வெக்கிற்கு அருகிலுள்ள டிரைரோசென்லேஜில் 30 வயது நபர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பாஸல்-ஸ்டாட் சட்டமா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் டிரைரோசென்லேஜ் பூங்கா வழியாக நடந்து சென்றபோது, அவருக்குத் தெரிந்த இரண்டு பேர் திடீரென அவரைத் தாக்கியதாகக் தெரியவந்துள்ளது.
30 வயதுடைய அந்த நபர் தாக்கப்பட்டதுடன் கத்தியைக் காட்டி மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதத்தின் போது, அவரது செல்போன் திருடப்பட்டது. இறுதியில் அந்த நபர் ஒரு டிராமில் தப்பிச் சென்றார்.
குற்றவாளிகள் அவரைப் பின்தொடர்ந்து தொடர்ந்து தாக்கியுள்ளனர்.
டிராம் பயணிகள் தலையிட்டபோது தான், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரை விட்டுவிட்டு தப்பி ஓடினர்.
நிகழ்வுகளின் போக்கு மற்றும் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை
சிறிது நேரத்திற்குப் பின்னர் 30 வயது நபரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் 21 வயது மற்றும் 34 வயதுடைய அல்ஜீரியர்கள் ஆவர்.
மூலம்- 20min.