அன்டர்சீன் அருகே உள்ள துன் ஏரியில் காணாமல் போன நீச்சல் வீரர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை, பிற்பகல் 1:35 மணியளவில் அவர் காணாமல் போனதாக பெர்ன் கன்டோனல் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
தனியாக தண்ணீருக்குள் இறங்கிய அந்த நபர் திரும்பி வரவில்லை.
அவசர சேவைகள் உடனடியாக தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கின.
செவ்வாய்க்கிழமை, தீவிர தேடுதல் முயற்சிகளுக்குப் பின்னர், அந்த நபரின் உயிரற்ற உடலை ஏரியிலிருந்து மீட்டுள்ளது.
இறந்தவர் பெர்ன் கன்டோனில் வசிக்கும் 77 வயதான ஜெர்மன் குடிமகன் ஆவார்.
மூலம்- 20min.