ஜெர்மனியில், தென்கிழக்கு பேடன்-வூர்ட்டம்பேர்க்கில் உள்ள பிபெராச் மாவட்டத்தில் நேற்றுமாலை பிராந்திய ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர் ஆகியோரும் அடங்கியுள்ளனர்.
சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், நிலச்சரிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக ஒரு புயல் இப்பகுதியைத் தாக்கிய நிலையில், இதனுடன் இந்த விபத்து தொடர்புடையதா என்பது இன்னும் தெரியவில்லை.