ஜெனீவா ஏரி அணிவகுப்பில் கடும் மழைக்கு மத்தியில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
கோடை வானிலையால் 2024 அணிவகுப்பு 70,000 மக்களை ஈர்த்தது.
எனினும் மழை காரணமாக நேற்று முன்தினம் இந்த அணிவகுப்பில் குறைந்தளவிலானோரே பங்குபற்றினர்.
எனினும், ஏற்பாட்டாளர்கள் இந்த ஆண்டு நிகழ்வு குறித்து திருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் எந்த தொழில்நுட்ப சிக்கல்களையும் அல்லது பெரிய சுகாதார பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை என்றும், எந்த சம்பவங்களும் நடக்கவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்-swissinfo