சூரிச் பகுதியில் நேற்று பிற்பகல் இடியுடன் கூடிய பலத்த மழையினால், சூரிச் மத்திய ரயில் நிலையத்தில் 4/5 தளங்களில் வெள்ளம் சூழ்ந்து படிக்கட்டுகள் வழியாக நீர் வழிந்தோடியது.
சூரிச் விமான நிலையத்தில், கனமழை காரணமாக பார்வையாளர் மாடத்தில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது
சூரிச்சின் வாலிசெல்லனில் உள்ள ஒரு ஷொப்பிங் சென்டரான கிளாட்சென்ட்ரமில், சில பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
தற்போதைய வானிலை தொடரும் என்று SRF Meteo தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமைக்குள் ஆல்ப்ஸின் வடக்கு சரிவுகளில் 80 முதல் 130 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது சராசரியாக ஜூலை மாதத்தில் பெய்யும் மழையில் பாதிக்கும் அதிகமாகும்.
மூலம் – 20min.