பெர்னில் கண்கள் மட்டுமே தெரியக் கூடிய வகையிலான நிகாப் அணிந்து கொண்டு, பல்பொருள் அங்காடியில் கொள்வனவுக்குச் சென்ற கொசோவோ நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரி 6, ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதன் மூலம், தற்போதைய பர்தா தடையை அவர் மீறினார் என பெர்ன் கன்டோனல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முகத்தை மூடுவதைத் தடை செய்யும் பெடரல் சட்டத்தை மீறியதற்காக அந்தப் பெண் இப்போது குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு 100 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை அவர் செலுத்தத் தவறினால், அவர் ஒரு நாள் சிறைத்தண்டனையை எதிர்கொள்வார். அபராதம் குற்றவியல் பதிவில் சேர்க்கப்படாது.
அபராதத்துடன் கூடுதலாக, கொசோவோ பெண் 100 சுவிஸ் பிராங்குகள் நடைமுறைக் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தில் முகத்தை மூடுவதற்கான தடை நடைமுறையில் உள்ளது.
பொது இடங்களில் முகத்தை மூடுபவர்களுக்கு, உதாரணமாக புர்கா அல்லது நிகாப் அணிந்தால், இப்போது 1,000 சுவிஸ் பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மூலம்- 20min.