கடந்த வெள்ளிக்கிழமை ஓல்டன் நகர மையத்தில் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
பிற்பகல் 2 மணியளவில், சால்ஜுஸ்லிவெக்கில் ஒரு நபர் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால், துன்புறுத்தப்பட்டு உடல் ரீதியாகத் தாக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, அவரது நெக்லசை திருடிக் கொண்டு குற்றவாளிகள் ரயில் நிலையத்தை நோக்கி ஒரு மரப் பாலம் வழியாக தப்பிச் சென்றதாக சோலோதர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
அன்று மாலை 7:15 மணிக்குப் பிறகு, மற்றொரு கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
ஓல்டனில் உள்ள ரோட்ஸ்மட்வெக்கில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால், ஒருவரின், தோள்பை பறிக்கப்பட்டுள்ளது.
வட ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்படுகிறார்கள்
இரண்டு வழக்குகளிலும் பல பொலிஸ் ரோந்துப் பிரிவினரால் உடனடியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தோல்வியடைந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் காயமின்றி இருந்தனர். இரண்டு சம்பவங்களும் தொடர்புடையதா என்பது குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
மூலம்- 20min

