லூசேர்ன் ஏரியில் மூழ்கிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி இரண்டு பேருடன் புறப்பட்ட சிறிய விமானம், இரண்டு நிமிடங்களில் லூசேர்ன் ஏரியில் விழுந்து மூழ்கியது.
விமானத்தில் இருந்து இரண்டு பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தனர்.
எனினும், விமானம் ஏரியில் மூழ்கிய நிலையில் அதனை கண்டுபிடிக்க பல நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலை ஏரியில் 100 மீற்றர் ஆழத்தில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானத்தை எப்படி மீட்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.