28.8 C
New York
Saturday, August 9, 2025

மார்கோ ரூபியோவை சந்தித்தார் சுவிஸ் ஜனாதிபதி.

சுவிஸ் ஜனாதிபதி  கரின் கெல்லர்-சுட்டர் மற்றும் பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் ஆகியோர் வொஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு மிகவும் நல்ல முறையில் இருந்தாக  என்று சுவிஸ் ஜனாதிபதியும், பொருளாதார அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த சந்திப்பு அமெரிக்க வரிகளில் எந்த உறுதியான முடிவுகளையும் ஏற்படுத்தவில்லை.

டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையில் ரூபியோவுக்கு செல்வாக்கு இருக்கிறதா என்று நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

சுவிஸ் பொருட்கள் மீது 39 சதவீத வரிகள் இன்று முதல் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்-  20min.

Related Articles

Latest Articles