சுவிட்சர்லாந்தின் கிரெங்கியோல்ஸ் அருகே உள்ள பிரைதோர்னில் பராகிளைடிங் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிளை சலஞ்ச் சுவிஸ் அல்ப்ஸ் 2025 இல் பங்கேற்ற பராகிளைடரே விபத்தில் சிக்கினார் என வலய்ஸ் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
நேற்று மதியம் 12:40 மணியளவில், அந்த நபர் கிரெங்கியோல்ஸுக்கு மேலே உள்ள பிரைதோர்ன் சிகரத்தின் அருகே விபத்துக்குள்ளானார்.
ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், அந்த நபரின் மரணத்தை மட்டுமே அவர்களால் உறுதிப்படுத்த முடிந்தது.
உயிரிழந்தவர் 57 வயதான சுவிஸ் குடிமகன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.