ஆர்காவ், பெயின்வில் ஆம் சீயில் உள்ள அவெக் கடையில் முகமூடி அணிந்த ஒருவர் ஆயுத முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை, மாலை 5 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத ஒருவர் கடைக்குள் நுழைந்து ஒரு ஊழியரிடம் துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டு, மிரட்டியுள்ளார்.
குற்றவாளி எந்த பொருட்களையும் எடுக்காமல் தெரியாத திசையில் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பல பொலிஸ் ரோந்துப் படைகள் உடனடி வேட்டை நடத்திய போதிலும், அந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
ஆர்காவ் கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மூலம்-20min.