சூரிச், மாவட்டம் 1 இல் உள்ள லிண்டன்ஹோஃப்ஸ்ட்ராஸில் இடம்பெற்ற மோதலில் 19 வயது உக்ரேனியர் ஒருவர் கத்தியால் குத்திப்பட்டு காயம் அடைந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை 8:45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பலருக்கு இடையே முன்னர் வாக்குவாதம் நடந்துள்ளது. இதன்போதே, அடையாளம் தெரியாத நபர், கத்தியால் குத்தியதில், அந்த நபர் பலத்த காயமடைந்தார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சூரிச் நகர பொலிசாரால், 19 வயது ஆப்கானிஸ்தானிஸ்தான் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்-20min.