19.5 C
New York
Tuesday, September 9, 2025

புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.

சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 கைதிகளும் 11 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் குறித்த கைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related Articles

Latest Articles