சூரிச் விமான நிலைய தரை வழி கையாளும் ஊழியர்கள் இன்று பிற்பகல் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
ஏர்லைன் அசிஸ்டன்ஸ் சுவிட்சர்லாந்து (AAS) ஊழியர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டதால், சூரிச்சில் அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க தரைவழி கையாளுதல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஏர்லைன்ஸ் சேர், ஏர் செர்பியா, யூரோவிங்ஸ், பெகாசஸ், லாட், ஏர் கெய்ரோ, ஏர் மாண்டினீக்ரோ மற்றும் ஜிபி ஏவியேஷன் ஆகியவற்றிற்கு சேவைகளை வழங்குகிறது.
மூலம்- swissinfo