2026 வரவுசெலவுத் திட்டத்தில், 845 மில்லியன் பிராங்குகள் பற்றாக்குறை ஏற்படும் என பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13வது அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் இராணுவ வரவுசெலவுத் திட்டம் காரணமாக, அரசாங்க செலவு 5% அதிகரித்து வருகிறது.
இந்த இரண்டும் வரும் ஆண்டுகளில் பெடரல் நிதியைப் பாதிக்கும்.எனினும், 2026 வரவுசெலவுத் திட்டம் அமெரிக்க வரிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் ஏற்றுமதி நிறுவனங்களில் சரிவு அல்லது இடமாற்றங்கள் வரி மற்றும் VAT வருவாயில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இது அடுத்த ஆண்டு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும் என்று அரசாங்கம் கூறுகிறது.
2026 வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் டிசம்பரில் திட்டமிடப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo