21.8 C
New York
Monday, September 8, 2025

பானங்கள், உணவுப்பொருட்களில் சீனியின் அளவு மேலும் குறைப்பு.

சுவிட்சர்லாந்தில்  Cereals, யோகட் மற்றும் பானங்களில் சீனியின் அளவைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது  2028 ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

சுவிஸ் அரசாங்கமும் 21 நிறுவனங்களும் வியாழக்கிழமை பெர்னில் மிலன் பிரகடனத்தை புதுப்பித்துள்ளன. இந்த முயற்சியின் கீழ் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, serums, breakfast cereals மற்றும் பால் சார்ந்த பானங்களில் சேர்க்கப்படும் சீனியின் அளவை 10% குறைக்க வேண்டும்.

இது குளிர்பானங்களுக்கும் பொருந்தும்.  யோகட்டுக்கு 5% குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களில் சீனியின் அளவைக் குறைப்பதற்கான உறுதிமொழி பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

யோகட்,  serums, breakfast cereals, பால் பானங்கள், மற்றும் குளிர்பானங்களில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது கணிசமாகக் குறைவான சீனியே சேர்க்கப்படுகிறது.

அதேவேளை, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் உப்பின் அளவைக் குறைக்க உணவுத் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டவும் அரசாங்கம் விரும்புகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles