19.7 C
New York
Monday, September 8, 2025

வேலைநிறுத்தத்தினால் விமான சேவைகள் தாமதம்.

சூரிச் விமான நிலையத்தின் தரைவழி சேவை வழங்குநரான ஏர்லைன் அசிஸ்டன்ஸ் சுவிட்சர்லாந்தின் (AAS) ஊழியர்கள் நேற்று பிற்பகல் 2 மணிக்கு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வேலைநிறுத்தம் யூரோவிங்ஸ், சேர், LOT, பெகாசஸ், ஏர் செர்பியா, GP ஏவியேஷன், ஏர் கெய்ரோ மற்றும் ஏர் மாண்டினீக்ரோ ஆகியவற்றால் இயக்கப்படும் 35 விமானங்களை பாதிக்கிறது.

சூரிச் விமான நிலையம் வேலைநிறுத்தம் குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, பயணிகளுக்கு வழிகாட்ட கூடுதல் ஊழியர்களை நியமித்து வருகிறது.

எனினும் பல விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles