கால்நடைகள் மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, ஓநாய்களைச் சுடுவதற்கு, ஆறு சுவிஸ் கன்டோன்கள் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.
கிராபுண்டன், வலைஸ், வாட், டிசினோ, ஸ்விஸ் மற்றும் சென் காலன் கன்டோன்களே இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன என்று, பெடரல் சுற்றுச்சூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
30 க்கு மேற்பட்ட ஓநாய்களை அழிப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் வாட் கன்டோனில் ஒன்றும் வலைஸில் இரண்டும் முற்றிலுமாக அகற்றப்பட உள்ளன.
ஏனைய கன்டோன்கள், 2025 இல் பிறந்த இளம் விலங்குகளில் மூன்றில் இரண்டு பங்கை சுட விரும்புகின்றன.
பெடரல் சுற்றுச்சூழல் அலுவலகம் இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து வருகிறது.
அவை அங்கீகரிக்கப்பட்டால், விதிமுறைகளை செயல்படுத்துவதற்குப் பொறுப்பான கன்டோன்கள், ஓநாய்களைக் கொல்ல உத்தரவிடலாம்.
மூலம்- swissinfo