வாட்ஸ்அப் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே பரப்பப்பட்ட பாரபட்சமான செய்திகள் தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரம், மேலும் நான்கு பொலிசாரை உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.
முன்னர் நான்கு பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இதுவரை 8 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விசாரணைகளின்படி, மேலும் இடைநிறுத்தங்கள் இருக்காது என்றும் லொசேன் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo