சூரிச் , மற்றும் பிற பகுதிகளை நேற்று மாலை தாக்கிய புயல், மெய்லனில் உள்ள ஆல்மென்ட் தொடக்கப் பள்ளியின் கூரையை தூக்கி வீசியுள்ளது.
குழந்தைகள் இருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்ற போதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
” குழந்தைகள் எங்களைச் சுற்றி கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று, மின்னல் இடியுடன் காற்று வீசத் தொடங்கியது.”
புயலிலிருந்து தப்பிக்க பயிற்சியாளர்கள் குழந்தைகளை கட்டடத்திற்குள் அழைத்தனர்.
அப்போது, கூரை குழந்தைகளை நோக்கி பறந்து வந்தது. அது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளம் கொண்டது.
பள்ளி கட்டிடத்திற்கும் விளையாட்டு வசதிகளுக்கும் இடையில் ஒரு தற்காலிக கூரை இருந்தது.
அந்தக் கூரையே காற்றில் பறந்து, அருகிலுள்ள வாகனங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மூலம்- 20min