பெர்ன் கன்டோனில் உள்ள ஏகெர்டனில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் 2000 ஆண்டுகள் பழமையான ரோமானிய பாலத்தின் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நிலத்தடி நீரில் பாதுகாக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஓக் குவியல்கள் கட்டுமானப் பணியின் போது வெளிப்பட்டுள்ளன.
பெர்ன் தொல்பொருள் ஊழியர்கள் அந்த குவியல்களிலிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வகத்தில் ஆய்வு செய்த போதே, 2000 ஆண்டுகள் பழமையான ரோமானிய பாலத்தின் எச்சங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
முன்னர் ஆற்றுப் படுகைகளில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பாலத்திலிருந்து ஆற்றில் வீசப்பட்ட அல்லது தொலைந்து போன ஏராளமான பொருட்களையும் கண்டுபிடித்திருந்தனர்.
இவற்றில் சப்பாத்து ஆணிகள், கோடரிகள், மீன்பிடி திரிசூலம், சாவிகள் மற்றும் நாணயங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தக் கண்டுபிடிப்புகள் ரோமானிய காலத்தில் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர வளைய பகுப்பாய்வுகள், பாலம் மீண்டும் மீண்டும் பழுதுபார்க்கப்பட்டன அல்லது மீண்டும் கட்டப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.
தற்போதைய கணிப்பீடுகளின்படி, ஆரம்பகால கட்டுமானம் கி.மு 40 ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டிருக்கிறது.
ரோமர்கள் செல்டிக் ஹெல்வெட்டியாவைக் கைப்பற்றிய சிறிது காலத்தில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கி.பி 369 ஆம் ஆண்டு வரை இந்தப் பாலம் 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் பெர்ன் கன்டோனில் இன்றைய ஸ்டூடனுக்கு அருகிலுள்ள சிறிய நகரமான பெட்டினெஸ்காவின் வாயில்களில் இருந்தது.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பாலம் ஜில்லை கடந்து, அந்த நேரத்தில் முக்கியமான நகரங்களை இணைத்த ரோமன் ஜூரா குறுக்குவெட்டின் ஒரு பகுதியாகும்.
மூலம்- swissinfo