வாக்குவாதத்தின் போது பலமுறை மிரட்டல் விடுத்ததற்காக, சுவிஸ் தேசிய கால்பந்து வீரர் பிரீல் எம்போலோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாசல் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
கால்பந்து வீரரின் மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்து, 3,000 பிராங் வீதம் 45 தினசரி அபராதம் விதித்துள்ளது.
அத்துடன், எம்போலோவுக்கு இரண்டு ஆண்டுகள் தகுதிகாண் காலத்தையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
2018 மே மாதம் பாசலில் நடந்த ஒரு வாக்குவாதத்தின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மூலம்- swissinfo