ரோன் நதி மற்றும் ஜெனீவா ஏரியின் நீர் பங்கீடு தொடர்பான இரண்டு ஒப்பந்தங்களில் சுவிட்சர்லாந்தும் பிரான்சும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த விடயம் குறித்த பேச்சுக்கள் தொடங்கி கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை ஜெனீவாவில் சுவிஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் அல்பர்ட் ரோஸ்டி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரெஞ்சு நாட்டினருக்கான பிரெஞ்சு அமைச்சர்-பிரதிநிதி லோரன்ட் சென்ட்-மார்ட்டின் ஆகியோரால் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகள் உள்ளிட்ட சூழலில், இந்த நீர்நிலைகளின் நிலையான நிர்வாகத்தை ஒருங்கிணைப்பதே இரண்டு ஒப்பந்தங்களின் ஒட்டுமொத்த நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தங்கள் பிரான்ஸ்-சுவிஸ் ஒத்துழைப்பில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றன.
மூலம்- swissinfo