18.2 C
New York
Sunday, September 7, 2025

லிஸ்பன் பனிக்கியூலர் விபத்தில் சுவிஸ் பிரஜைகளும் பாதிப்பு.

போர்ச்சுக்கல்லின் லிஸ்பன் நகரில் இடம்பெற்ற பனிக்கியூலர் (funicular) விபத்தில் சுவிஸ் பிரஜைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் காயம் அடைந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

21 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவர்களில் 17 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் போர்ச்சுக்கல், ஜேர்மனி, சுவிஸ், உக்ரைன், கனடா,தென்கொரிய நாட்டவர்கள் இருப்பதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்

இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எவரையும் காவல்துறை அதிகாரப்பூர்வமாக பெயரிடவில்லை.

எனினும்,  இறந்தவர்களில் இரண்டு கனடியர்கள், ஒரு ஜெர்மன் மற்றும் ஒரு உக்ரேனிய நாட்டவர் இருப்பதாக நம்புவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறினர்.

முன்னதாக, ஐந்து போர்ச்சுக்கீசியர்கள், இரண்டு தென் கொரியர்கள் மற்றும் ஒரு சுவிஸ் நாட்டவர் அடையாளம் காணப்பட்டதாக பொலிசார் நம்புவதாகக் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, காயமடைந்தவர்களில் பதினொரு வெளிநாட்டினர் அடங்குவதாகவும், அவர்களில் இரண்டு ஜெர்மன், இரண்டு ஸ்பானியர்கள், ஒரு பிரெஞ்சு பெண், ஒரு இத்தாலியர், ஒரு சுவிஸ், ஒரு கனடியன், ஒரு கொரியர், ஒரு மொராக்கோ மற்றும் ஒரு கேப் வெர்டியன் அடங்குகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இறந்தவர்களின் தேசியங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக போர்த்துகீசிய மக்களுக்கு சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் நாட்டின் “ஆழ்ந்த இரங்கலை” தெரிவித்துள்ளார்.

மூலம்- swissinfo, BBC

Related Articles

Latest Articles