17.7 C
New York
Sunday, September 7, 2025

அமெரிக்காவுடன் சுவிஸ் அமைச்சர் ஆக்கபூர்வமான பேச்சு.

வரிகளைப் பற்றி கலந்துரையாட, அமெரிக்க அதிகாரிகளுடன் வொஷிங்டனில் நடந்த சந்திப்பு “ஆக்கபூர்வமானது” என்று சுவிஸ் பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து இரு நாடுகளுக்கும் நல்ல வாய்ப்புகளைக் காண்கிறது மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்த விரும்புகிறது என்று அவர் சனிக்கிழமை இரவு X இல் பதிவிட்டுள்ளார்.

பார்மெலின் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோரைச் சந்தித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுடனான வரிகள் தொடர்பாக, இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகும்.

வெள்ளிக்கிழமை லுட்னிக் உடனான சந்திப்புக்குப் பின்னர், பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து பர்மெலின் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏராளமான சுவிஸ் பொருட்களுக்கு 39% இறக்குமதி வரிகளை விதித்த பிறகு புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் அவசியமாகின.

சில நாட்களுக்குப் பிறகு, சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் மற்றும் பர்மெலின் ஆகியோர் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொண்ட போதும், எந்த முடிவுகளையும்  எட்டாமல் திரும்பியிருந்தனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles