சூரிச்சில் உள்ள ராணுவ முகாம் பகுதியை இடதுசாரி குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்க முயன்ற போது நேற்றிரவு வன்முறை மோதல்கள் வெடித்தன.
அவர்கள் வேலிகளில் சங்கிலிகளைக் கட்டி, குப்பைத் தொட்டிக்கு தீ வைத்தனர்.
இரவு 11 மணியளவில் சூரிச் நகர பொலிசார் தலையிட்டனர்.
அவசர சேவைகள் மீது பட்டாசுகள், கற்கள் மற்றும் போத்தர்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதனால் பொலிசார் ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகள் மூலம் பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.
நள்ளிரவில், அதிகாரிகள் அந்தப் பகுதிக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த முடிந்தது.
யாருக்கேனும் காயங்கள் ஏற்பட்டதா அல்லது யாரேனும் கைது செய்யப்பட்டனரா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- 20min

