ட்ரோன்கள் அவதானிக்கப்பட்டதால், டென்மார்க்கின் கோபன்ஹேகன் விமான நிலையமும், நோர்வேயின் ஒஸ்லோ விமான நிலையமும் நேற்றிரவு தற்காலிகமாக மூடப்பட்டன.
ட்ரோன்கள் அவதானிக்கப்பட்டதால், தற்காலிகமாக மூடப்பட்ட கோபன்ஹேகன் விமான நிலையம், நள்ளிரவு 12:20 மணிக்கு மீண்டும் விமான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், தாமதங்கள் மற்றும் ரத்து செய்தல்கள் தொடரும் என்று விமான நிலையம் அறிவித்ததுள்ளது.
இதற்கிடையில், நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள விமான நிலையமும் ட்ரோன்கள் காணப்பட்டதால் இரவு முழுவதும் மூடப்பட்ட பின்னர், மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது .
இரண்டு நிகழ்வுகளிலும், ட்ரோன்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
டென்மார்க்கின் தலைநகர் விமான நிலையமான கோபன்ஹேகன்-காஸ்ட்ரப் மற்றும் ஒஸ்லோ-கார்டர்மோன் விமான நிலையங்கள் ஸ்கண்டிநேவியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களாகும்.
நேற்று மாலை இரண்டு அல்லது மூன்று பெரிய ட்ரோன்கள் அந்தப் பகுதியில் காணப்பட்டதை அடுத்து கோபன்ஹேகனில் விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது,
இதற்கிடையில், நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், அகெர்ஷஸ் கோட்டையில் உள்ள இராணுவ வளாகத்தின் மீது பல ட்ரோன்கள் பறந்ததாக நேற்றிரவு 9 மணிக்குப் பின்னர் தகவல்கள் வெளியாகின.
இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு, விமான நிலையத்திற்கு அருகில் மற்றொரு சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, விமான நிலையம் மற்றும் ஒஸ்லோவின் வான்வெளி இரண்டும் மூடப்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து, விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதாக விமான நிலையத்தின் தகவல் தொடர்புத் துறை அறிவித்தது.
மூலம்- swissinfo

