சுவிட்சர்லாந்தில் பாதிக்கும் மேற்பட்ட தனி வீடுகளில், ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே வசிக்கின்றனர் என, ஃபெடரல் புள்ளிவிவர அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில், மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், மொத்தம் 4.84 மில்லியன் குடியிருப்புகள் உள்ளன.
அனைத்து கட்டடங்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவை ஒற்றை குடும்ப வீடுகளாகும். அவற்றில் 55% ஒன்று அல்லது இரண்டு நபர்களால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று FSO தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் ஒரு நபருக்கு சராசரியாக வாழும் இடம் 46.6 சதுர மீட்டர்கள். இந்த எண்ணிக்கை 2021 வரை தொடர்ந்து உயர்ந்து, அதன் பின்னர் தேக்கமடைந்துள்ளது.
மூலம்- swissinfo

