4.4 C
New York
Monday, December 29, 2025

3,400 மீட்டர் உயரத்தில் கதிரியக்க அவதானிப்பு நிலையம்.

பெர்னீஸ் ஓபர்லாண்டில் உள்ள ஜங்ஃப்ராஜோச்சில் கதிரியக்கத்தன்மையை அளவிடுவதற்கான நிலையத்தை, பெடரல் பொது சுகாதார அலுவலகம் அமைத்துள்ளது.

ஐரோப்பாவின் மிக உயரமான இந்த அளவீட்டு நிலையத்தை உள்துறை அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

கடல் மட்டத்திலிருந்து 3,400 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில், இது அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் நிகழக் கூடிய  ஏதேனும் அணுசக்தி சம்பவத்திற்குப் பின்னர்,  சுவிட்சர்லாந்தை அடையும் கதிரியக்க தாக்கத்தை அதன் தன்மை மக்கள் வசிக்கும் பகுதிகளை அடைவதற்கு முன்னரே விரைவாகக் கண்டறிவதற்கு இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கதிரியக்கத்தன்மை கண்டறியப்பட்டால், தேசிய எச்சரிக்கை மையத்திற்கு நேரடி அறிக்கை அனுப்பப்படும்.

இதன் மூலம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்.

கதிரியக்க அயோடின் அல்லது சீசியம் போன்ற தனிப்பட்ட ரேடியோநியூக்லைடுகளை அடையாளம் கண்டு அவற்றின் செறிவை தீர்மானிப்பதன் மூலம் நிலையம் காற்றில் கதிரியக்கத்தன்மையை அளவிடுகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles